'பிளாஸ்ட்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சுபாஷ் கே ராஜ் தனது அடுத்த திரைப்டத்திற்காக நடிகர் சீயான் விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுபாஷ் கே ராஜ், அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தற்போது இந்த வெற்றிக் கூட்டணி தங்களது புதிய திரைப்படத்திற்கான தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விக்ரம், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 63' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் மற்றும் சீயான் விக்ரம் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.