இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
G.V. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பின்னர் படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த தீபாவளி அன்று வெளியிட்டிருந்த அவர், படத்தின் POSTER இல் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ‘மகுடம்’ திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, படம் வெளியாகும் திகதி குறித்ததாக இருக்கலாம் என்று இரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.