புதிய 'கோஸ்ட் ரைடர்' திரைப்படம், 'ஜானி பிளேஸ்' என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் ரயான் கோஸ்லிங் நடிக்கிறார். முன்னதாக 2007 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் வெளியான 'கோஸ்ட் ரைடர்' திரைப்படங்களில் ஹாலிவுட் நடிகர் 'நிக்கோலஸ் கேஜ்' இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய பதிப்பில் முதன்முறையாக ரயான் கோஸ்லிங் 'கோஸ்ட் ரைடர்' ஆக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஷான் லெவி மற்றும் ரயான் கோஸ்லிங் கூட்டணியில் உருவாகி வரும் 'ஸ்டார் வார்ஸ்: ஸ்டார்பைட்டர்' (Star Wars: Starfighter) திரைப்படம் 2027 மே 28ஆம் திகதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து, 2028இல் 'கோஸ்ட் ரைடர்' திரைப்படம் வெளியாகிறது.