19 Views
ஆனால், இந்த தகவல் குறித்து இயக்குநர் அனில் ரவிபுடி தற்போது விளக்கம் அளித்துள்ளார். மகேஷ் பாபுவுடன் அடுத்ததாக இணைவதாக வெளியாகும் செய்திகள் உண்மையல்ல என்றும், தற்போது பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கிடையில், மகேஷ் பாபு நடிப்பில் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இத்திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகேஷ் பாபுவின் அடுத்த திரைப்பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதே தற்போது சினிமா இரசிகர்களின் கவனமாக உள்ளது.