தேவையான பொருட்கள்.
பச்சரிசி ஒரு Cup
வெள்ளரித் துருவல் தேவையான அளவு
பச்சை மிளகாய்
இஞ்சி
எலுமிச்சை சாரு
மஞ்சள் தூள்
பெருங்காயத்தூள்
உப்பு
கறிவேப்பிலை
கடுகு, உளுத்தம்பருப்பு, நெய்
செய்முறை.
அரிசியில் சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை இட்டு கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய்,பெருங்காயம், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் நறுக்கிய வெள்ளரி துருவலையும் உப்பையும் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து அதனுடன் வடித்த சாதத்தையும் சேர்த்து சிறிது எலுமிச்சை சாற்றையும் கலந்தால் சுவையான வெள்ளரி சாதம் தயார்.