61 Views
நல்லெண்ணெய் ஊற்றி கிராமத்து சுவையில் வீடே மணக்கும் வகையில் கிராமத்து சுவையில் பாரம்பரியமான கருவாட்டு குழம்பு எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க...
தேவையான பொருட்கள் :
கருவாடு
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
பூண்டு - 15 - 20 பல்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
அடுப்பில் கடாய் வைத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். அடுத்து அதில் பூண்டு மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.
தக்காளி நன்கு மென்மையாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து கலந்துவிட்டு மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கலந்துவிட்டு கொள்ளவும்.தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து 10 நிமிடங்களுக்கு மூடி வைத்து சமைக்கவும்.
இதற்கிடையே மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் சுத்தம் செய்த கருவாட்டைப் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு வறுத்து கொள்ளுங்கள்.
10 நிமிடங்களுக்கு பிறகு குழம்பு மூடியை திறந்து வறுத்து வைத்துள்ள கருவாட்டை எண்ணெய்யுடன் அப்படியே போட்டு கலந்துகொள்ளுங்கள். ஏற்கனவே கருவாட்டில் உப்பு இருக்கும் என்பதால் ருசி பார்த்து தேவையென்றால் உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேகவிட்டு எண்ணெய் பிரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
அவ்வளவுதான் கிராமத்து சுவையில் பாரம்பரியமான கருவாட்டு குழம்பு சாப்பிட தயார் .