Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
03
உணவில் அதிகம் உப்பு சேர்த்தால் நீரிழிவு நோய் ஏற்படுமா?

SOORIYAN GOSSIP - உணவில் அதிகம் உப்பு சேர்த்தால் நீரிழிவு நோய் ஏற்படுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

314 Views
நீரிழிவு நோய்க்கு சர்க்கரையே காரணம் என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். இருப்பினும், சர்க்கரை உட்கொள்வதற்கும் நீரிழிவு நோய்க்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வு உப்பின் மீது குற்றம் சாட்டுகிறது.

உணவில் உப்பின் அளவைக் குறைப்பது இரண்டாம் வகை நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் என்று தெரிவித்தனர். இருப்பினும், நான்கு இலட்சம் பேரை மட்டும் கண்காணித்துத் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையில் பல வரம்புகள் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஆய்வு உப்பு உட்கஒள்ளுன் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.

United Kingdom போன்ற நாடுகளில் மக்கள் ஒரு நாளைக்கு சுமார் 8 கிராம் அல்லது 2 தேக்கரண்டி அளவு உப்பை உட்கொள்கிறார்கள். இதில் முக்கால் பங்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து கிடைக்கிறது. மீதமுள்ளதில் பெரும்பகுதி சமையலின்போதும், சிற்றுண்டிகளை உட்கொள்ளும்போதும் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தங்கள் உப்பு உட்கொள்ளலை ஒரு நாளைக்கு 6 கிராமுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் . கடந்த இருபது ஆண்டுகளில் அங்குள்ள மக்கள் உப்பு உட்கொள்ளும் அளவைக் குறைத்திருந்தாலும், அவர்கள் இன்னும் அதைக் குறைக்க வேண்டியுள்ளது.

தினமும் ஒரு கிராம் உப்பு உட்கொள்வதோடு ஒப்பிடுகையில், இரண்டு கிராம் உப்பு உட்கொள்வது 'வகை 2' நீரிழிவு நோய் (type 2 diabetes) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்குமா என்பதையும் இந்த ஆய்வால் விளக்க முடியவில்லை. பின்னர், 24 மணி நேர இடைவெளியில் பங்கேற்பாளர்களின் சிறுநீர் வழியாக எவ்வளவு உப்பு வெளியேறியது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். அவர்கள் எவ்வளவு சோடியம் அல்லது உப்பை உட்கொண்டனர் என்பதைத் தீர்மானிப்பதற்கான மிகத் துல்லியமான வழி இதுவேயாகும்.

சிறுநீரில் உள்ள சோடியத்தின் அளவுக்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரில் அதிக அளவு சோடியம் இருப்பது இரண்டாம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான அதிக அபாயத்துடன் தொடர்புடையது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் இரத்தத்தில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன. இது இரத்த அழுத்த அதிகரிப்புக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, எலிகள் மீதான முந்தைய ஆய்வு ஒன்றில், இன்சுலினின் செயல்பாடும் இதனால் மந்தமடையக்கூடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்சுலின் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலினின் செயற்பாடு குறையும்போது, ​​இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உணவுமுறைக்கு குறைவாக உப்பை உட்கொள்ளுங்கள். இது இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top