Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
இலங்கையில் உருவாகும் ‘ராவண மகன்’ – கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

SooriyanFM Gossip - இலங்கையில் உருவாகும் ‘ராவண மகன்’ – கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

86 Views
இலங்கைத் திரையுலகில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராவண மகன்’ (தமிழ்) / ‘வீரா’ (சிங்களம்) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா அண்மையில் கொழும்பில் கோலாகலமாக நடைபெற்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல நடன இயக்குநர் மாஸ்டர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம், பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. குட் பிரெண்ட்ஸ் சைன் புரொடக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கே. சிவா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

சிங்களத் திரையுலகின் மறைந்த முன்னணி நட்சத்திர நடிகரான ஜாக்சன் ஆண்டனி அவர்களின் புதல்வர் அகில தனுத்தர ஆண்டனி, இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தில் இலங்கையைச் சேர்ந்த பல திறமையான கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைக்கதை மற்றும் இணை இயக்குநராக தமிழ்ச்செல்வன் சுப்பிரமணி பணியாற்ற, சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் வசன அமைப்பை ருத்ரா அமிர்தரெத்தினம் மேற்கொள்கிறார். இத்திரைப்படத்திற்கு தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார். அவற்றை ஆண்டனிதாஸ் மற்றும் மகாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர். மகனுக்குத் தந்தையின் தாலாட்டாக பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள பாடலை ஆண்டனிதாஸ் பாடியுள்ளார். அந்தப் பாடல் தனது பாடல் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top