இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் Beast. இத்திரைப்படம் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அனிருத்தின் இசையிலும்,சிவகார்த்திகேயனின் வரிகளிலும் வெளியான Beast திரைப்படத்தின் அரபிக்குது பாடல் தற்போது வெளியாகி நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் Youtube தளத்தில் 800 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இதுவரையில் Youtube தளத்தில் அதிகமான பார்வைகளை பெற்ற பாடல்களின் வரிசையில் மாரி 2 திரைப்படத்தின் Rowdy Baby பாடல் காணப்படுகிறது. இந்த பாடல் 1745 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.