Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
16
"பல நடிகைகள் என்னுடன் நடிக்க மறுத்தனர்" - மனம் திறந்த நடிகர் இந்திரன்ஸ்

SooriyanFM Gossip - "பல நடிகைகள் என்னுடன் நடிக்க மறுத்தனர்" - மனம் திறந்த நடிகர் இந்திரன்ஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

316 Views
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான இந்திரன்ஸ், தற்போது அறிமுக இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகை மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் முழுவதுமாக வாராணசியில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், காசி நகரில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் இம்மாதம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் Trailer வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் இந்திரன்ஸ் "இந்தப் படத்தின் கதாநாயகன் யார் என்று கேட்டால் என் பெயரைச் சொல்ல வேண்டாம், இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறுங்கள் என நினைத்தேன். காரணம், என் முந்தைய கதாபாத்திரங்கள் மற்றும் என் தோற்றத்தைப் பார்த்து பல நடிகைகள் என்னுடன் நடிக்க மறுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அப்படிப்பட்ட சூழலில் மதுபாலா என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். அவரது இந்த வெளிப்படையான பேச்சு இரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top