ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய 55வது திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இத்திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார்.
மலையாள நடிகர் மம்முட்டியும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளர். தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடப்பா காடுகள் நிறைந்த பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி தனது சினிமா வாழ்க்கையில் இதற்கு முன் நடிக்காத காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.