'கருப்பு'திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் சூர்யா நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யாவுடன் ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் முதல் முறையாக இணைந்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 47 ' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மலையாளத்தில் ஹிட் கொடுத்த ‘ரோமன்சம்’ மற்றும் ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய, இயக்குநர் ஜித்து மாதவன் முதல்முறையாக சூர்யாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இயக்குநர் ஜித்துவின் தனித்துவமான நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் கச்சிதமான பொழுதுபோக்கு படமாக
இப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திரைப்படக் குழுவினர் சிறப்பு காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.