2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக்கானது நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமாகியிருந்தது.
Galle Gallants மற்றும் Jaffna Kings ஆகிய அணிகள் மோதிய முதல் போட்டியில் Galle Gallants அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இன்றைய தினம் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் Dambulla Sixers மற்றும் Kandy Royals ஆகிய அணிகள் மோதியிருந்தன.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Dambulla Sixers அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Kandy Royals அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.