இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் என்றாலே உலக சினிமா இரசிகர்களுக்குத் தனி நாட்டமுண்டு. காரணம், இவருடைய திரைப்படங்களில் நேர்த்தியான திரைக்கதை, வித்தியாசமான கதாபாத்திரங்கள், பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் மற்றும் அவருக்கே உரித்தான தனித்துவமான கதைக்களம் என்பன சிறப்பாக இருக்கும்.
அந்த வகையில், நோலனினுடைய புதிய திரைப்படமான 'The Odyssey' திரைப்படம் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது. Matt Damon, Tom Holland மற்றும் Robert Pattinson ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருவதுடன் மாபெரும் வசூலையும் ஈட்டி வருகிறது.
'The Odyssey' திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.