உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள ஆர்ஜென்டினா அணி இம்முறையும் கிண்ணத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இத்தாலி மற்றும் பிரேசில் ஆகிய அணிகள் மாத்திரமே இதுவரை உலக கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 2 முறை கிண்ணத்தை வென்ற அணிகளாக உள்ளன. இத்தாலி 1934, 1938 ஆகிய ஆண்டுகளிலும், பிரேசில் 1958, 1962 ஆகிய ஆண்டுகளிலும் வென்று இச்சாதனையை படைத்துள்ள நிலையில், நடப்புச் சம்பியனான ஆர்ஜென்டினா இம்முறையும் கிண்ணத்தை வென்று அந்தச் சாதனையில் இணையுமா என்பதுதான் ஆர்ஜென்டினா இரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பாகவுள்ளது.
1986ஆம் ஆண்டு மரடோனா தலைமையிலான ஆர்ஜென்டினா அணி உலக கிணத்தை வென்று, 1990இல் தொடர்ந்து கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டிருந்தது. ஆனால், மெஸ்ஸி தலைமையிலான தற்போதைய அணி எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தும் என்று மெஸ்ஸி இரசிகர்கள் கருத்துத் தெரிவித்த வருகின்றனர்.