‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தை லோகேஷ் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் நிரஞ்சன் இயக்கி வரும் இத்திரைப்படத்தில் கட்சி சேரபுகழ் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரியில் நிறைவடைந்தது.
திரைப்படத்தின் "மல்லிகை மொட்டு" வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது, இந்நிலையில், ‘மிஸ்டர் பாரத்’ வரும் October மாதம்1 ஆம் திகதி வெளியாக உள்ளதாக திரைப்படக்குழு Promo வீடியோ வெளியிட்டுள்ளது.