தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜீவா, தற்போது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜீவாவின் 47வது திரைப்படமாகும்.
'சிவா மனசுல சக்தி' திரைப்பட வெற்றிக்கு பின் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா - ராஜேஷ் கூட்டணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் First look போஸ்டர் நேற்று படக்குழு வெளியிட்டது. அத்தோடு திரைப்படத்தின் Promo வீடியோ இம்மாதம் 21 ஆம் திகதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.