Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
பெயர் மாறிய உலக நாடுகள்: காரணம் தெரியுமா?

SooriyanFM Gossip - பெயர் மாறிய உலக நாடுகள்: காரணம் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

75 Views
பல உலக நாடுகள் அரசியல், சமூகம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக பெயர் மாற்றங்களை செய்துள்ளன.அவ்வாறு அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் செய்த, சில நாடுகளையும் அதற்கான காரணத்தையும் அறிந்துகொள்வோம்.

1. மியான்மர் (பர்மா)

இது ஒரு தென்கிழக்கு ஆசிய நாடு. ஆரம்பத்தில் பர்மா என்றே அழைக்கப்பட்டு வந்தது.1989-ம் ஆண்டு அங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது `மியான்மர்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பெயர் மாற்றம் சர்வதேச அளவில் சர்ச்சையையும், எதிர்ப்பையும் சந்திந்தது. இதனால், இன்றளவும் பல ஆசிய நாடுகள் இந்நாட்டின் பெயரை பர்மா என்றே அழைத்து வருகின்றன.

2. தாய்லாந்து (சியாம்)

தாய்லாந்து, 1939-ம் ஆண்டு வரை `சியாம்’ என்றே அறியப்பட்டது. ‘தாய்லாந்து’ என்பதற்கு ‘சுதந்திர நாடு’ என்று பொருள்.நாட்டின் சுதந்திரத்தை வலியுறுத்துவதற்காகவும், ஒற்றுமை மற்றும் அடையாளத்தை நோக்கமாக கொண்டும் தாய்லாந்து என்ற புதிய பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

3. வடக்கு மசிடோனியா குடியரசு (மசிடோனியா குடியரசு)

2019-ம் ஆண்டு மசிடோனியா குடியரசு, அதன் பெயரை `வடக்கு மசிடோனியா குடியரசு’ என மாற்றியது.இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் நேட்டோவின் ஒரு பகுதியாக மாறுவதும், அதன் அண்டை நாடான கிரீஸிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வதற்காகவும் இந்த மாற்றம் நிகழ்ந்தது.

5. காங்கோ ஜனநாயகக் குடியரசு (ஜைர்)

1997-ம் ஆண்டில், தொடர்ச்சியாக நடந்த அரசியல் மோதல்களுக்குப் பின்னர் `ஜைர்’ அதன் பெயரை கொங்கோ ஜனநாயகக் குடியரசு என்று மாற்றியது. கொங்கோ மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சர்வாதிகாரியாக ஆட்சி செய்த, மொபுடு செசே செகோவின் ஆட்சியில் இருந்து.

நாட்டை பாதுகாக்க இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்தப் புதிய பெயர் ஜனநாயக ஆட்சி முறைக்கு திரும்புவதை வலியுறுத்தியது.

5. பங்களாதேஷ் (கிழக்கு பாகிஸ்தான்)

1971-ம் ஆண்டு நடந்த போரைத் தொடர்ந்து மேற்கு பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது. இதன் விளைவாக பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானது.

7. சுவாசிலாந்து (ஈஸ்வதினி)

2018-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்தின் மன்னர் அதிகாரப்பூர்வமாக நாட்டின் பெயரை `ஈஸ்வதினி’ என மாற்றுவதாக அறிவித்தார்.

சுவாசிலாந்துக்கும், சுவிட்சர்லாந்திற்கும் இடையே நிலவிய பெயர் குழப்பத்தைத் தவிர்க்க இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.

7. நெதர்லாந்து (ஒல்லாந்து)

கடந்த 2020-ம் ஆண்டு சந்தைப்படுத்துதல் நடவடிக்கைக்காக, ஒல்லாந்து நாட்டை `நெதர்லாந்து’ என அரசு அதிகாரபூர்வமாக மாற்றியது.

8. பெர்சியா (ஈரான்)

நவீன கால ஈரான் 1935-ம் ஆண்டு வரை வரலாற்று ரீதியாக `பெர்சியா’ என்று அழைக்கப்பட்டது.

நாட்டிற்கான புதிய தொடக்கத்தை குறிக்கும் வகையில் ஈரான் என்ற பெயர் அப்போதைய மன்னர் ரேசா ஷாவால் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், இலக்கியங்களில் பாரசீகம் என்றே குறிப்பிடப்படுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top