228 Views
வாய், நாக்கு அல்லது உதட்டில் இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆறாத புண்கள், வாய் அல்லது ஈறுகளில் சிவப்பு அல்லது வெள்ளை நிறத் திட்டுகள், விழுங்குவதில் சிரமம் மற்றும் காரணமின்றி பற்கள் தளர்வது போன்றவை வாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
சிகரெட், பீடி புகைத்தல், குட்கா, பாக்கு, புகையிலை மெல்லுதல், மது அருந்துதல் மற்றும் போதிய வாய் சுகாதார பராமரிப்பு இல்லாமை ஆகியவை இந்த நோய்க்கான முக்கிய ஆபத்து காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிகிச்சை வெற்றியை அதிகரிக்கும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
வாய் புற்றுநோயைத் தடுப்பதற்காக புகையிலை மற்றும் மதுபானப் பழக்கங்களைத் தவிர்ப்பதுடன், வாயில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.