இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக ‘அவிரா' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்தியாவின் முதல் முழுநீள Photo Realistic AI திரைப்படம் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான திரைப்படங்களைப் போல பிரபல நடிகர் ,நடிகைகளை வைத்து எடுக்காமல், AI தொழில்நுட்பத்தின் மூலம் உண்மையான மனிதர்களைப் போல தோற்றமளிக்கும் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத் திரைப்படம் புராண பின்னணி, கற்பனை உலகம், வீரம், தர்மம் போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டதாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது..
AI தொழில்நுட்பம் இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு ‘அவிரா’ அதற்கான முதல் படியாக அமையுமா? என்பது இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது .