அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அருள்வான்’. ரம்யா பாண்டியன், காளிவெங்கட், ஆரவ், கிருத்திகா மற்றும் ஜான்விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்த்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘90 பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு வெளியான 'தகராறு' திரைப்படத்த்திற்குப் பிறகு, அருள்நிதி மற்றும் கணேஷ் விநாயகம் இந்ததிரைப்படத்தின் மூலமாக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, இரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தது.
இந்நிலையில்,‘அருள்வான்’ திரைப்டத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.