கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் மோதவிருக்கும் ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய அணிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் களமிறங்கவுள்ளன.
Spanish மொழி பேசும் இரண்டு நாடுகள் இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளன. இதற்கு முன், 1930ஆம் ஆண்டு இடம்பெற்ற முதல் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் உருகுவே மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய அணிகள் மோதியிருந்தன. தற்போது, 96 ஆண்டுகளுக்குப் பின் Spanish மொழி பேசும் இரண்டு நாடுகள் நேருக்கு நேர் மோதும் இறுதிப் போட்டியாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி அமைந்துள்ளது.
ஆகவே, நடப்புச் சம்பியனான ஆர்ஜென்டினா 4ஆவது முறையாகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்கிலும், ஐரோப்பிய சம்பியனான ஸ்பெய்ன் 2வது முறையாகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்கிலும், இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு 12.30க்கு(20.07.2026) இடம்பெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டியில் களம்காணவுள்ளன.