357 Views
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து, தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. நாணயசுழட்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது.
388 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டன் சுப்மன் கில்லும் அதிரடியான தொடக்கத்தை அமைத்தனர். தனது இயல்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித், அதிக ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றி நம்பிக்கையை அதிகரித்ததுடன், இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.
இந்த சாதனை மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ள ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். அவரது சாதனை இந்திய கிரிக்கெட்டுக்கு மேலும் ஒரு பெருமையை சேர்த்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்