தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'திருப்பாச்சி' மீண்டும் திரையரங்குகளில் Re- release செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரரசு இயக்கத்தில், super goods flims தயாரிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
ஆக்ஷன், குடும்ப பின்னணி மற்றும் மாஸ் காட்சிகளால் இரசிகர்களை கவர்ந்த 'திருப்பாச்சி', மீண்டும் பெரிய திரையில் வெளியாகும் என்ற தகவலால் சமூக வலைதளங்களில் விஜய் இரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். இருப்பினும், இதற்கான மீள் வெளியீட்டுத் திகதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.