ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதயத்தைப் பாதுகாப்பதென்பது முக்கியமானதொன்றாகும்.
எமது உடல் நலனின் முக்கிய கருவானா இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்கும் சில உணவு முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்...
● தினமும் புரதச்சத்து நிறைந்த காலை உணவைத் தவறாமல் உண்ண வேண்டும்.
● நார்ச்சத்து நிறைந்த கீரை மற்றும் காய்கறி வகைகளை உணவில் சேர்த்தல் வேண்டும்.
● அசைவப் பிரியர்கள் வாரத்தில் இரு முறையேனும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகளை உட்கொள்ளல்.
● உப்பின் அளவை உணவுகளில் குறைத்துப் பயன்படுத்துதல்.
● வெண்ணெய்ப்பழம்(Avocado), Olive எண்ணெய் மற்றும் முட்டை போன்ற ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை உட்கொள்ளல்.
● தினமும் ஒன்று முதல் மூன்று கோப்பைகள் வரை தேநீர் அருந்தலாம்.
இவற்றைக் கடைப்பிடிப்பதுடன் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆகச் சிறந்ததாகும். மேலும், நேர்த்தியான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் ஏற்படாத வாழ்க்கை முறை என்பவற்றைப் பின்பற்றினால் இதய ஆரோக்கியம் மேம்படும்.