சர்க்கரை நோயினால் எமது சமூகத்தில் பல பெரியவர்கள் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் எம்மில் பல பேர் சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் கூட இருக்கலாம்.
இந்த சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுவது, உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம் போன்றவைதான். ஆகவே இந்த நோயிலிருந்து இலகுவாக எங்களைப் பாதுகாப்பதற்கு உகந்த காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ளல் அவசியமாகும்.
அனைத்துக் காய்கறிகளையும் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, எந்தெந்தக் காய்கறிகளை எடுத்துக் கொண்டால் என்னென்ன சத்துகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்...
● கீரை வகைகள் - முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றில் புரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளன.
● வெண்டிக்காய் - இதிலுள்ள மியூசிலாஜ் எனும் வழுவழுப்பான பொருள் வயிற்றினுள் சென்று சர்க்கரையை இரத்தத்திலிருந்து மெதுவாக வெளியிடச் செய்யும்.
● பாகற்காய் - Vitamin C அதிகம் நிறைந்துள்ள பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த சத்தான உணவாகும்.
● அவரைக்காய் - புரோட்டின், நார்ச்சத்து மற்றும் அயனோஃபோலிக் அமிலம் என்பன அவரைக்காயில் நிறைந்திருப்பதால், சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.
● கோவா - இதன் சிறப்பான குணம் பசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய உணவாகும். ஆகவே, சர்க்கரை நோயுள்ள ஒருவரது பசியானது கட்டுப்பாட்டில் இருந்தால் இரத்தத்தில் சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே, கோவா மிகச் சிறந்த தீர்வாகும்.