கடைகளில் வாங்குவது போல் இல்லாமல் நமது வீட்டிலேயே ஆரோக்கியமான பயத்தம் பருப்பு லட்டு செய்து சாப்பிடுவது எமக்கு மிகவும் நல்லது
தேவையான பொருட்கள்.
பயத்தம்பருப்பு 2 கிண்ணம்
பொடித்த சர்க்கரை 2 கிண்ணம்
முந்திரிப்பருப்பு 20 துண்டுகள்
நெய் 1 கிண்ணம்
ஏலக்காய்த்தூள் சிறிதளவு
செய்முறை.
பயத்தம்பருப்பை மெதுவான தீயில் சற்று வறுத்து அரைக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அதில் வறுத்த பயத்தம்பருப்பு மா,பொடித்த சர்க்கரை,முந்திரிப்பருப்பு,ஏலக்காய்த்தூள் மற்றும் உருக்கிய நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பின் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வெறும் ஐந்து நிமிடங்களில் சுவையான பயத்தம் பருப்பு லட்டு தயார்.