இயக்குநர் ராஜமோகன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'Adress' திரைப்படம் September மாதம் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக–கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருந்த ஒரு கிராமம் தனது அதிகாரப்பூர்வ முகவரியையே (Address) இழந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்தில் பூஜா ஜாவேரி , தம்பி ராமையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.