கடைகளில் வாங்குவது போல் இல்லாமல் சுகாதாரமாகவும் சுவையாகவும் வெண்பொங்கலை நாம் அனைவரும் இலகுவாக எவ்வாறு வீட்டிலே செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்.
பச்சை அரிசி 1/2 Cup
பாசிப்பயறு 1/2 Cup
தண்ணீர் தேவையான அளவு
நெய் 2 முதல் 3 மேசைக்கரண்டி
மிளகு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு 10 துண்டுகள்
இஞ்சி சிறிதளவு
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்
செய்யும் முறை.
ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பின் அரிசி மற்றும் பருப்புடன் 4 Cup தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் பாத்திரத்தை மூடி 4 முதல் 5 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும்.
பிறகு இவற்றை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் 2 அல்லது 3 கரண்டி நெய் ஊற்றி சூடானதும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் தாளித்த கலவையை வெந்த பொங்கலில் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கினால் வெண்பொங்கல் தயார்.