79 Views
கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே நம் நினைவுக்கு வரும் முதல் இயற்கை பானம் இளநீர். இதனை வெறும் வயிற்றில் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதவாது,
இரவெல்லாம் தூங்கி எழுந்து, உடல் வறண்டு இருக்கும் போது வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கும் போது, அதில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் தாதுக்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன.
கோடை வெயிலால் ஏற்படும் சோர்வு மற்றும் தளர்ச்சியை நீக்கி, நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. வெயிலால் ஏற்படும் வியர்வை மூலம் உடலிலிருந்து வெளியேறும் நீர்ச்சத்தை இது உடனடியாக ஈடுசெய்கிறது.