மெட்டா நிறுவனத்தின் முக்கிய சமூக வலைத்தளமான Facebook, உலக நாடுகளின் பல பகுதிகளில் இன்று திடீரென முடங்கியது. இதனால் இலட்சக்கணக்கான பயனர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கணக்குகள் தானாகவே Log outஆவது, புதிய பதிவுகள் ஏற்றப்படாமல் இருப்பது, மற்றும் திரையில் Error என்று காட்டுவது போன்ற பிரச்சனைகளை பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
Desktop மூலமாக Facebook பயன்படுத்துபவர்களையே இது பெருமளவு பாதித்துள்ளது. Mobile App பயன்படுத்துபவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Facebook நிறுவனத்தின் தகவல் மையங்களை தொடர்பு கொள்வதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இந்த முடக்கத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த திடீர் கோளாறு குறித்து விளக்கமளித்துள்ள Facebook நிறுவனம், "தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சில மணிநேரங்களில் முழுமையாக சரிசெய்யப்படும்" என உறுதியளித்துள்ளது. மேலும், இதனால் பயனர்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்து, அதிகாரபூர்வமாக மன்னிப்பும் கோரியுள்ளது.