தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் நடித்த ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை, டிரைவர் ஜமுனா, பர்ஹானா, தீராக் காதல்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் 'ஓ சுகுமாரி' என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்து வருகிறார்.
இத் திரைப்படத்தில் திருவீர், ஜான்சி, ஆமணி, முரளிதர் , ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இத் திரைப்படத்திற்கு பரத் மஞ்சிராஜு இசையமைக்கிறார். இத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிற நிலையில்
இத் திரைப்படத்தின் டீசரை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.