இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் தான் Dude. காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இந்திய பெறுமதிப்படி 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றிருந்தது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் கீர்த்தீஸ்வரனிடம் Dude 2 திரைப்படம் உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
Dude 2 குறித்து பிரதீப் ரங்கநாதனிடம் பேசியுள்ளேன். இரண்டாம் பாகம் உருவானால், அது Dude படத்தின் நேரடி தொடர்ச்சியாகவோ அல்லது அதே கதையை மையமாகக் கொண்ட புதிய கதையாகவோ அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து Dude திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.