Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
'கட்டா குஸ்தி 2’ திரைப்படக்குழுவினரை மகிழ்ச்சிப்படுத்திய தயாரிப்பாளர் !

SOORIYAN GOSSIP - 'கட்டா குஸ்தி 2’ திரைப்படக்குழுவினரை மகிழ்ச்சிப்படுத்திய தயாரிப்பாளர் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி பெருமளவில் வரவேற்பைப் பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி தற்பொழுது நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இதன் இரண்டாம் பாகத்தையும் செல்லா அய்யாவு இயக்கியுள்ளதுடன், முதலாம் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், முனீஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் இதிலும் தொடர்ந்து நடித்துள்ளனர்.
​இத்திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாவிற்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அத்துடன் திரையரங்குகளில் இத்திரைப்படம் தொடர்ந்தும் வெற்றிநடை போடுகிறது .

​இவ்வாறானதொரு பின்னணியில், இத்திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், திரைடப்படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு சொகுசு கார் ஒன்றையும், இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலியையும் பரிசாக வழங்கியுள்ளார்.

​மேலும், இத்திரைப்படத்தின் நாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட திரைப்படக்குழுவினர் அனைவருக்கும் தலா 40 கிராம் வெள்ளி நாணயங்களும் இதன்போது பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top