தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் சூர்யாவின் சினிமா வரலாற்றில், திரையரங்குகள் மூலம் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்த முதல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.150 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் விரைவில் ரூ.300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.