ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது.
அதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு ‘திரிஷ்யம் 2’ வெளியானது. நேரடியாக OTT இல் வெளியான திரிஷ்யம் 2, முதல் பாகத்தை போல மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘திரிஷ்யம்’ 3ம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் 7 நாட்களில் இந்திய மதிப்பில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் அதிகம் வசூலித்த மலையாள திரைப்படங்களின் பட்டியலில் இந்தத் திரைப்படம் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.