சித்திரம் பேசுதடி, அஞ்சாதே உள்ளிட்ட வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்தவர் தான் இயக்குநர் மிஷ்கின். ஆனால் சில காலமாக படங்கள் இயக்குவதை தவிர்த்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் மிஷ்கின்.
இந்நிலையில் மீண்டும் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார் மிஷ்கின். அந்தவகையில் மிஷ்கின் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் நடிகர் அருண்விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது.
அருண் விஜய் மிஷ்கின் கூட்டணி இணைவது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் நடிக்கப்போகும் சக நடிகர்கள் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.