இந்திய T20 கிரிக்கெட் அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் செயற்பட்டு வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக அவரது துடுப்பாட்டம் மோசமான நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் சூர்யகுமாரை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு
சுப்மன் கில், திலக் வர்மா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் ஒருவரை நியமிக்க ஆலோசனை நடத்துப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த சில வாரங்களில் இந்திய T20 அணியின் புதிய தலைவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.