42 Views
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சோபிக்கத் தவறியதால் Zimbabwe T20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சம்சன் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார்.
BCCIஇன் கூட்டத்தில் பேசிய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "சஞ்சு சம்சனுக்கு தற்போது 31 வயதாகிறது, இந்த நவம்பர் மாதத்தில் 32 வயதாகிவிடும். அடுத்த T20 உலகக் கிண்ணம் 2028-ல் நடைபெறும்போது அவர் 34 வயதை நெருங்கிவிடுவார்.
எனவே, அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்கு நிரந்தர ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக விளையாடக்கூடிய வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களை இப்போதிருந்து வளர்த்தெடுப்பதே சரியான முடிவாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
வயது மற்றும் போதிய அளவு துடுப்பாட்டத்தில் அவர் சிறப்பான நிலையில் இல்லாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் ,
T20 அணியில் இடம் பறிபோனாலும், சஞ்சு சம்சனை ஒருநாள் போட்டிகளில் முழுமையாகப் பயன்படுத்த கம்பீர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஒருநாள் போட்டிகளில் கே.எல். ராகுல் பகுதி நேர விக்கட்காப்பாளராகச் செயற்பட்டு வருகிறார்.
அவரைத் துடுப்பாட்டவீரராக மட்டும் ஆட வைத்துவிட்டு, சஞ்சு சம்சனை மத்திய வரிசையில் துடுப்பாட்டவீரராக ஆடவைத்து முழுநேரவிக்கட்காப்பாளராகப் பயன்படுத்திக்கொள்ள கம்பீர் BCCIயிடம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.