நடிகர்,இயக்குநர் என பல திறமைகள் மூலம் தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்து வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து இந்திய மதிப்பில் ரூ. 100 கோடி வசூலை ஈட்டும் திரைப்படங்களாகக் கொடுத்து வந்த அவரது சினிமாப் பயணத்தில் 'LIK' திரைப்படம் தோல்வியைக் கொடுத்தது.
இந்நிலையில், தற்போது பிரதீப் ரங்கநாதன் தெலுங்குத் திரைப்படமொன்றில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் சந்திரசேகர் எலெட்டி சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனுக்குக் கதை கூறியிருப்பதாகவும் . கதை பிடித்திருந்தால் பிரதீப் ரங்கநாதன் சம்மதிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த திரைப்படமானது உறுதியானால், அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் ஆரம்பமாகும் எனவும் தெலுங்கு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.