Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
28
மருதாணி வைத்துக்கொள்ள பிடிக்குமா? 

SOORIYAN FM - மருதாணி வைத்துக்கொள்ள பிடிக்குமா? Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26 Views
நமது பாரம்பரிய விசேஷங்கள், பண்டிகைகள் மற்றும் திருமண சுபகாரியங்கள் என்றாலே பெண்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது கைகளில் மருதாணி வைப்பதுதான். கைகளில் மருதாணி எவ்வளவு அழகாக, அடர் சிவப்பாக பிடிக்கிறதோ, அவ்வளவு அழகாக அந்த விசேஷ நாளும் மாறும் என்பது ஐதீகம்.

மருதாணி அரைக்கும் போது, மருதாணி இலைகளை மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ போடுவதற்கு முன்பே, ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி மற்றும் இரண்டு பாக்கு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தால் நன்றாக சிவக்கும்.

புளியில் உள்ள இயற்கையான அமிலத்தன்மை, மருதாணி இலையில் இருக்கும் 'லாசோன்' என்ற நிறமியை வேகமாக வெளிக்கொண்டு வர உதவுகிறது.
பாக்கில் உள்ள துவர்ப்புத் தன்மை, மருதாணியின் சிவப்பு நிறத்தை இன்னும் அடர்த்தியாகவும், பல நாட்களுக்கு மங்கிப் போகாமலும் நீடிக்கச் செய்கிறது.

கைகளின் அமைப்பிற்கு ஏற்ப சரியான வடிவங்களை தேர்ந்தெடுப்பது மருதாணியின் அழகை மேலும் கூட்டும். அரபிக் வடிவம், மண்டலா ஆர்ட் அமைப்பு, நெகட்டிவ் ஸ்பேஸ் போன்ற வடிவங்களை கைகளுக்கேற்ப போட்டால் பிரம்மாண்டமான தோற்றத்தை நமக்கு தரும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலவை..
மருதாணி கைகளில் காய்ந்தவுடன் அது உதிர்ந்து விடாமல் இருக்க, சர்க்கரை மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை ஒரு பஞ்சில் நனைத்து மருதாணியின் மேல் தடவ வேண்டும். சர்க்கரை மருதாணியைக் கைகளில் ஒட்ட வைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறு அதன் நிறத்தை இன்னும் ஆழமாக்குகிறது.

தவிர்க்க வேண்டியவை..
மருதாணி வைத்தவுடன் கைகளை சோப் அல்லது குளிர்ந்த நீர் கொண்டு கழுவக்கூடாது. குறைந்தது 8 முதல் 10 மணிநேரம் தண்ணீர் படாமல் இருந்தால் நல்லது.
மருதாணியை வேகமாக உலர வைக்க "ஹேர் டிரையர்' போன்ற கருவிகளையோ அல்லது மின்விசிறி காற்றிலேயோ ஆறவிடக்கூடாது. அது மருதாணியின் இயற்கையான நிறத்தைக் கெடுக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top