திரைப்பட நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கத் தயாராக இருக்கும் நடிகர் விஜய்யை வாழ்த்திப் பல பதிவுகள் சமூகவலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தளபதி விஜய் தனது X தளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், குழந்தைகளை பற்றிக் குறிப்பிட்ட விடயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த பதிவில், 'வெற்றிக்கு ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்' என்று தனது குழந்தை இரசிகர்களைக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.