தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் ஜோசப் விஜய் அவர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி தனது 52ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார்.
இவரது பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி இயக்குநர் அட்லி இயக்கத்தில், இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையில், தளபதி விஜய் 3 வேடங்களில் நடித்து, கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி இந்திய மதிப்பில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் பெற்ற வெற்றித் திரைப்படமான 'மெர்சல்' Re-Release செய்யப்படவுள்ளது.
தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் வெளியாகும் திகதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் 'மெர்சல்' திரைப்படத்தின் Re-Release இரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.