34 Views
WhatsApp செயலியில் மற்றவர்களுடன் உரையாடுவதற்கு தொலைபேசி இலக்கத்தை கட்டாயம் உள்ளிட வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் WhatsApp
குழுக்களில் இணையும் போது, அவர்களின் எண் அனைவரும் பார்க்கும் வகையில் இருப்பது , பயனர்களுக்கு அசௌகரியமானதாக இருந்தது.
இதன் காரணமாக தொலைபேசி இலக்கத்தை பகிராமல், Username மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் புதிய அம்சத்தினை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், Instagram இல் உள்ளது போல், WhatsApp பயனர் பெயர் (Username) மூலம் தொடர்பு கொள்ள முடியும்.
ஆனால்,Instagram இல் உள்ளது போல் Search ல் சில எழுத்துகளை உள்ளீடு செய்ததும் Suggestion காட்டுவது போல் WhatsApp இல் இருக்காது.
WhatsApp இல் பயனர் Username ஊடாக ஒருவரை தொடர்பு கொள்ள அவர்களின் முழு பயனர் பெயரும் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
இந்த வார இறுதிக்குள் Username பதிவு செய்யும் வசதி WhatsApp செயலியிற்குள் கொண்டு வரப்படும் எனவும், ஆண்டின் இறுதிக்குள் Username மூலம் தொடர்பு கொள்ளும் வசதி பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.