நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் நடிக்கிறார். அதன் பின்னர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்திலும் அதனைத் தொடர்ந்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் விளையாட்டினை மையப்படுத்தி ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதற்கு முன்னர் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கிரிக்கெட்டை மையப்படுத்தி லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கியிருந்தார், அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயனும் கானா என்ற கிரிக்கெட்டை பிரதமானமாக கொண்ட திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார். அதனால் இவர்கள் இருவரும் இணையும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.