நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சர்தார்'.
பி.எஸ். மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி, அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாகமான 'சர்தார் பாகம் 2' உருவாகி வருகிறது.
இதில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு POSTER ஐ வெளியிட்டு படக்குழு வாழ்த்து கூறியுள்ளது.