நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், இத்திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்க்கு முன்னர் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் தெலுங்கில் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர்.
தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ‘ரக்கா’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.