2017 ஆம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார்.
இவர் தற்பொழுது '29' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இத் திரைப்படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்து உள்ளனர்.
இத் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத் திரைப்படம் இந்த மாதம் 8ஆம் திகதி வெளியாக உள்ளது.
இத் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் U/A தணிக்கை சான்றிதழை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இத் திரைப்படத்தின் Promo Vedio வெளியாகியுள்ளது.