கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த வருடம் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி வெளியானது.முன்னதாக இத்திரைப்படத்தை இயக்கவிருந்த இயக்குநர் சுந்தர் C இத்திரைப்படத்திலிருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் சிபி சக்கரவர்த்தி இத்திரைப்படத்தை இயக்குவார் எனவும் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் எதையும் படக்குழு ஆரபிக்கவில்லை.
இந்நிலையில் இன்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாளையொட்டி கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவது உறுதி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.