அமெரிக்காவின் புளோரிடா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் சுமார் 3.2 கோடி நுளம்புகளைப் பறக்க விட விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
Google இன் 'டிக்பக் பிராஜெக்ட்' மூலம் ஆய்வகங்களில் கோடிக்கணக்கான ஆண் நுளம்புகள் வளர்க்கப்படுகின்றன.
இவற்றுக்கு வோல்பாக்கியா என்ற இயற்கையான பக்டீரியா தொற்று ஏற்படுத்தப்படுகிறது.
விஞ்ஞானிகள் இந்த வோல்பாக்கியா பக்டீரியா கொண்ட ஆண் நுளம்புகளை மட்டும் திறந்துவிடுவார்கள்.
இந்த ஆண் நுளம்புகள் வெளியில் உள்ள சாதாரண பெண் நுளம்புகளுடன் இணையும்போது, அந்தப் பெண் நுளம்புகள் கருத்தரிப்பது தடுக்கப்படுகிறது.
இதனால், அடுத்த தலைமுறை நுளம்புகள் பிறப்பது தடுத்து நிறுத்தப்படும்.
இதன்மூலம், கொடிய நோய்களை பரப்பும் நுளம்புகளை அழிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.